×

ஷங்கர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா ?…

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஷங்கருக்கு ஆஸ்தான இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் இந்த படத்தில் பணியாற்ற உள்ளார். ராம்
 

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ உருவாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஷங்கருக்கு ஆஸ்தான இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் இந்த படத்தில் பணியாற்ற உள்ளார்.

ராம் சரண் முதல்முறையாக முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதேபோன்று இந்தி நடிகர் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பான் இந்தியா படம் என்பதால் இன்னும் பலமொழி நடிகர்கள் இந்த படத்தில் இணையவுள்ளனர். முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று தெரியாத நிலையில் அது குறித்த தகவல்தான் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா பெண் பத்திரிக்கையாளராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.