×

மெகா கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி ? ஷங்கர் படத்தின் புதிய அப்டேட்…

ஷங்கர் இயக்கும் மெகா கூட்டணி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தின் பணிகள் அசுர வேகத்தை எட்டியுள்ளது. ஷங்கருக்கு அடுத்தடுத்த படங்கள் கையிருப்பில் இருப்பதால், இந்த படத்தை விரைவாக தொடங்கி முடிக்கும் ஆர்வத்தை உள்ளார். இதற்கான பணிகளையும் ஷங்கர் முடுக்கிவிட்டுள்ளார். பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை
 

ஷங்கர் இயக்கும் மெகா கூட்டணி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தின் பணிகள் அசுர வேகத்தை எட்டியுள்ளது. ஷங்கருக்கு அடுத்தடுத்த படங்கள் கையிருப்பில் இருப்பதால், இந்த படத்தை விரைவாக தொடங்கி முடிக்கும் ஆர்வத்தை உள்ளார். இதற்கான பணிகளையும் ஷங்கர் முடுக்கிவிட்டுள்ளார். பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ உருவாக உள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராம் சரண் இந்த படத்தில் முதல்முறையாக இளம் முதலமைச்சர் நடிக்கிறார். ராம் சரணுடன் அவரது தந்தையும், நடிகருமான சிரஞ்சீவியும் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இதோடு இந்தி நடிகர் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெண் பத்திரிக்கையாளர் கேரக்கரில் இவர் நடிக்கவிருக்கிறார்.

இந்த படம் பான் இந்தியா படம் உருவாகுவதால் பலமொழி நடிகர்கள் இணையவுள்ளனர். இந்நிலையில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து ஷங்கர் இயக்கும் மெகா கூட்டணி படத்தில் தற்போது விஜய் சேதுபதி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.