×

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் இணையும் பலமொழி பிரபலங்கள்…

ஷங்கர் இயக்கும் பான் இந்தியா திரைப்படத்தில் பலமொழி நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பெயரிடப்படாத இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ராம் சரண் ஒரு பவர்புல்
 

ஷங்கர் இயக்கும் பான் இந்தியா திரைப்படத்தில் பலமொழி நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

ஷங்கர்- ராம் சரண்‌ கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ இப்படம் உருவாக உள்ளது. பெயரிடப்படாத இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ராம் சரண் ஒரு பவர்புல் முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க இருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் இப்படத்தில் ஏற்கனவே ராம் சரணின் தந்தையும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி இணைந்துள்ளார்.

இதேபோன்று இந்தி நடிகர் சல்மான் கான் இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் 5 மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அப்படி பலமொழி நடிகர்கள் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.