×

‘கதைகளை திருடிதான் எழுதுகிறேன்’ - பகீர் கிளப்பிய ராஜமௌலியின் தந்தை !

 

நான் கதைகளை திருடிதான் எழுதுகிறேன் என்று பிரபல கதாசிரியர் விஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு திரையுலகில் கதைகளின் கதாநாயகனாக இருப்பவர் கதாசிரியர் விஜேந்திர பிரசாத். பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தையான இவர், புகழ்பெற்ற பான் இந்தியா திரைப்படங்களான பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களுக்கு சிறந்த கதையை எழுதியது இவர்தான். 

இதுதவிர இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த பஜ்ரங்கி பைஜான் படத்திற்கும் இவர்தான் கதை எழுதினார். தமிழில் மஹதீரா, சிறுத்தை ஆகிய படங்களுக்கு விஜேந்திர பிரசாத் தான் கதை எழுதினார். தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருகிறார். 

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற விஜேந்திர பிரசாத் பேசிய அவர், நான் கதையை எழுதுவதில்லை. திருடுகிறேன். நாம் எல்லோரையும் சுற்றி ஏராளமான கதைகள் உள்ளன. அதை வைத்துதான் கதை எழுதுகிறேன். மகாபாரதம், இராமாயணம் ஆகியவை போல அனைவரின் நிஜ வாழ்க்கையிலும் ஏராளமான கதைகள் கொட்டி கிடக்கிறது என்று கூறினார்.