×

மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி! சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் இணையும் படம்!

‘தொண்டிமுதலம் த்ரிக்ஷக்ஷியம்’ படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் காம்போ மீண்டும் இன்னொரு படத்திற்காக இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டிமுதலம் த்ரிக்ஷக்ஷியம் படம் மலையாளத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற படங்களுள் ஒன்று. சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் மற்றும் பஹத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிழைக்க வழியில்லாத ஹீரோ தனது மனைவியின் தங்க செயினை அடமானம் வைத்து தனக்குச் சொந்தமான இடத்தில் போர் போட்டு விவசாயம் செய்ய நினைக்கிறான். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது அந்த
 

‘தொண்டிமுதலம் த்ரிக்ஷக்ஷியம்’ படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் காம்போ மீண்டும் இன்னொரு படத்திற்காக இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டிமுதலம் த்ரிக்ஷக்ஷியம் படம் மலையாளத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற படங்களுள் ஒன்று. சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் மற்றும் பஹத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பிழைக்க வழியில்லாத ஹீரோ தனது மனைவியின் தங்க செயினை அடமானம் வைத்து தனக்குச் சொந்தமான இடத்தில் போர் போட்டு விவசாயம் செய்ய நினைக்கிறான். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது அந்த செயினை ஒருவன் திருடி விடுகிறான். அது தான் பாஹத் பாசில். பின்னர் நடப்பது தான் கதை. இப்படத்தில் அனைவரது நடிப்பும் நம்மை கதைக்களத்துக்கு அழைத்துச் செல்லும். குறிப்பாக பஹத் ஃபாசில்.

மலையாளத்தின் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கு எப்போதும் ஒரு இடமுண்டு.

தற்போது சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா ஜோடி மீண்டும் ஒரு படத்தின் இணைய உள்ளனர்.

‘கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்’ படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இப்படத்தை இயக்குகிறார். “நாங்கள் ஜூலை 11 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினோம். சூரஜின் கதாபாத்திரம் படத்தில் பள்ளி ஆசிரியராகவும், நிமிஷா அவரது மனைவியாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்தில், கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் இருக்காது.


சுவாரஸ்யமாக, முழு கதையும் ஒரு வீட்டினுள் நடக்கிறது. ஆனால், கொரோனா காரணமாக உருவாக்கப்பட்ட படம் அல்ல. இது முன்பே நாங்கள் மனதில் வைத்திருந்த கதை. இருப்பினும், இது தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்துவதால், நாங்கள் அதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் அனுமதி பெற்று வெளியில் இருந்த ஒரு சில காட்சியை படமாக்கினோம்.” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். சூரஜ் எஸ் குருப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ மற்றும் ‘விக்ருதி’ படங்களுக்காக சூரஜ் வெஞ்சரமூடு கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.