×

ஆஸ்கர் தகுதி சுற்று பட்டியலில் இடம்பிடித்த மலையாள படம்!.

 

சினிமாத்துறையின் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. வாழ்கையில் ஒரு முறையாவது அதை வாங்கிவிட வேண்டும் என்பதே பல கலைஞர்களின் கனவு. இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது.

அதற்கு பல நாடுகளிலிருந்து சிறந்த படங்கள் அனுப்பப்பட்டு வரும்  நிலையில் இந்தியாவிலிருந்து மலையாள படமான 2018 படம் அனுப்பப்பட்டது. இது அந்த ஆண்டு கேரளாவில் வந்த வெள்ளத்தை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. அதேப்போல சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் மலையாள படமான ‘ தி பேஸ் ஆப் தி பேஸ்லஸ்’ என்ற படத்தின் மூன்று பாடல்கள் அனுபப்பட்டது. அவை தற்போது ஒரிஜினல் பாடல் பிரிவின் தகுதி சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதேப்போல கடந்த ஆண்டு ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்தியாவின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.