அனிமல் படம் சமூகத்திற்கு நோய் -  காங்கிரஸ் எம்.பி. 

 
அனிமல் படம் சமூகத்திற்கு நோய் -  காங்கிரஸ் எம்.பி. 

விமர்சனங்கள் எழுதும் ஜோக்கர்களை பிடிக்காது என அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. கடந்த 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில், அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கவே இதுபோன்ற திரைப்படங்கள் உதவும் என கூறியிருக்கிறார்.