×

உருவாகிறது ‘ஆர்ஆர்ஆர்’ இரண்டாம் பாகம்... ராஜமெளலி கொடுத்த சூப்பர் அப்டேட் 

 

‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்திய அளவில் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை பெற்ற அந்த படம் உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது. 

 இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் ஒன்று உள்ளது. 

சர்வதேச தரத்தில் உருவாகும் அந்த படத்தை முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜமௌலி இயக்குவார் அல்லது அவரது மேற்பார்வையில் வேறு ஒரு இயக்குனர் இயக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.