×

தி வாக்சின் வார் படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்

 

தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பான தி வாக்சின் வார் படத்தின் முன்னோட்டம் வெளியானது. 

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். வெளியான நாள் முதலே இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இத்திரைப்படம். மேலும், அண்மையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது இப்படத்திற்கு கொடுக்கப்பட்டது. இது, மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவேக் அக்னிகோர்தி இயக்கியிருந்த இப்படத்தில், அனுபம் கெர், பல்லவி ஜோஸி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், விவேக் அக்னிகோர்தி அடுத்ததாக இயக்கியிருக்கும் தி வாக்சின் வார் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில், கோவேக்சின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. 

null