×

தெலுங்கில் கொண்டாடப்படுகிறதா ‘வாரிசு’ ?.. ரசிகர்களின் உற்சாக வீடியோ !

 

 தெலுங்கில் ‘வாரிசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் பொங்கலையொட்டி கடந்த 11-ஆம் தேதி வெளியானது. 

இதையடுத்து தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியானது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தெலுங்கில் அதைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ள ‘வாரசுடு’ வசூல் சாதனை படைக்கும் என்றே தெரிகிறது.