×

அந்த மனசுதான் சார் கடவுள்.....கொடுத்த வாக்கை காப்பாற்றினார் விஜய் தேவகொண்டா.... 

 

குஷி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நூறு குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார் நடிகர் விஜய் தேவரகொண்டா. 

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, எனது ஊதியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்று கூறினார்.  இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்னது போலவே,100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.