‘குஷி’ பட வெற்றி –100 குடும்பங்களுக்கு தலா 1லட்சம் கொடுக்கும் ‘விஜய் தேவரகொண்டா’.
Sep 5, 2023, 22:11 IST
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘குஷி’. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் நல்ல வசூலை கொடுத்து வருவதாக போஸ்டர் மூலமாக படக்குழு தெரியப்படுத்தி வருகின்றனர்.
ஷிவா நிர்வாணா இயக்கிய குஷி படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.