×

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12-வது படத்தின் அப்டேட்

 

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. தற்போது முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கத்தில் ‘குஷி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை முடித்த பிறகு சூப்பர் ஹிட்டடித்த 'ஜெர்ஸி' படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு அடைந்ததாகவும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு தொழிற்சாலையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.