×

நித்யா மேனனுடன் மலையாளத்தில் இரண்டாவது என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!

மார்கோனி மத்தாய் படத்தை அடுத்து விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார். விஜய் சேதுபதி மார்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அப்படத்தை சனில் கலாதில் இயக்கியிருந்தார். அப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அறிமுக இயக்குனர் வி.எஸ். இந்து என்பவர் இயக்கத்தில் நித்யா மேனனுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். போன வருடமே விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால்
 

மார்கோனி மத்தாய் படத்தை அடுத்து விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

விஜய் சேதுபதி மார்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அப்படத்தை சனில் கலாதில் இயக்கியிருந்தார். அப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குனர் வி.எஸ். இந்து என்பவர் இயக்கத்தில் நித்யா மேனனுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். போன வருடமே விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் இப்படம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தப் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறைந்தபட்ச குழுவினருடன் கேரளாவில் இந்த படத்தின் முக்கிய பகுதிகள் படமாக்கப்படும்.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை அன்டோ ஜோசப் தயாரிக்கிறார்.

இதற்கிடையில், விஜய் சேதுபதி 800 என்ற படத்தில் இலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மாமனிதன், லாபம், மாஸ்டர் உள்ளிட்ட ஏராளாமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.