×

கொடூர பார்வையில் ‘விஜய் தேவரகொண்டா’ – புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து தமிழ்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கானது. இதைத்தொடர்ந்து தமிழில் நடிகையர் திலகம், நோட்டா,டியர் காம்ரேட் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான படம் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்.5 ஹூரோயின்கள் நடித்த இந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய
 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து தமிழ்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கானது. இதைத்தொடர்ந்து தமிழில் நடிகையர் திலகம், நோட்டா,டியர் காம்ரேட் படங்களில் நடித்தார்.

கடைசியாக அவர் நடித்து வெளியான படம் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்.5 ஹூரோயின்கள் நடித்த இந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

இந்நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ஹூரோயினாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.

கொரானா காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. லைகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்ஸர் லுக்கில் தோன்றியுள்ளார். போஸ்டரில்‌ பின்பகுதியில் புலி இருப்பது போன்றும், அதற்கு முன்னால் பாக்ஸராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். கொடூர பார்வையில் விஜய் தேவரகொண்டாவை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.