×

கொரானாவை வென்ற கமல் பட நடிகர்…. திடீரென மரணமடைந்ததால் சோகம்…

கொரானாவிலிருந்து மீண்ட 98 வயது மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி திடீரென காலமானார். தேசாதனம், ஓரால்மந்திரம், களியாட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மலையாளத்தில் மூத்த நடிகரான இவர், கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தின் மூலம் தனது முதிய வயதில் அறிமுகமானார். பின்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக உடல் நலம்
 

கொரானாவிலிருந்து மீண்ட 98 வயது மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி திடீரென காலமானார்.

தேசாதனம், ஓரால்மந்திரம், களியாட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மலையாளத்தில் மூத்த நடிகரான இவர், கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தின் மூலம் தனது முதிய வயதில் அறிமுகமானார். பின்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 98 வயதான அவருக்கு, வழக்கமான எடுக்கப்பட்ட கொரானா பரிசோதனையில் அவருக்கு பாசிடிவ் என தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலை தேறி வந்த நிலையில் கொரானா இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. ஆனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

பழம்பெரும் நடிகரான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியின் மறைவு செய்தி கேட்டு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.