×

திரிஷா விலகிய படத்தில் காஜல் அகர்வால்..

திரிஷா விலகிய தெலுங்கு படத்தில் அவருக்கு பதிலாக தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார் திரிஷா. இந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ எனும் தெலுங்கு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்யப்படிருந்தார். 5 வருடங்களுக்குப் பிறகு திரிஷா நடிக்க இருந்த தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை தொடங்க தயாரான
 

திரிஷா விலகிய தெலுங்கு படத்தில் அவருக்கு பதிலாக தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார் திரிஷா. இந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ எனும் தெலுங்கு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்யப்படிருந்தார். 5 வருடங்களுக்குப் பிறகு திரிஷா நடிக்க இருந்த தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பை தொடங்க தயாரான நிலையில், படக்குழுவுடன் ஏற்பட்ட  தகராறு காரணமாக திரிஷா திடீரென்று ஆச்சார்யா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகி நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் அளித்து இருந்ததுமே திரிஷா விலகலுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்  திரிஷாவுக்கு பதிலாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகி உள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் நேரத்தில் ரசிகர்களுடன் . ட்விட்டரில் பேசிய காஜல், அதனை  உறுதி செய்துள்ளார். “சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். மேலும் சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன்-2’ படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கிறார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திலும் நடித்து வருகிறார்.