×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு… கேரளாவில் தியேட்டர்களை திறக்க முடிவு… முதல் படமாக ‘மாஸ்டர்’ ரிலீஸ்

கேரளாவில் திரையரங்குகளை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழகம் போல கேரளாவிலும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் நவம்பர் மாதமே திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கியபோதும் கேரளாவில் கடந்த 5ம் தேதிதான் அனுமதி வழங்கப்பட்து. அதுவும் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, கொரோனா வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அனுமதி அளித்தப்போதிலும் திரையரங்குகளை திறக்கப்போவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். திரையரங்குகள் ரொம்ப நாட்களாக
 

கேரளாவில் திரையரங்குகளை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் போல கேரளாவிலும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் நவம்பர் மாதமே திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கியபோதும் கேரளாவில் கடந்த 5ம் தேதிதான் அனுமதி வழங்கப்பட்து. அதுவும் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, கொரோனா வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கேரள அரசு உத்தரவிட்டிருந்தது.

அரசு அனுமதி அளித்தப்போதிலும் திரையரங்குகளை திறக்கப்போவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். திரையரங்குகள் ரொம்ப நாட்களாக மூடிக்கிடக்கின்றன. அதனால் கேளிக்கை வரியை ரத்து, மின் கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன.

இதற்கு கேரள அரசு மௌனம் காத்து வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவே, திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பேசிய பினராயி விஜயன், 3 மாதத்திற்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் என்றும், மின் கட்டணம் பாதியாக என்றும் கூறினார். இந்நிலையில் பிலிம் சேம்பர் கூட்டம் நேற்றிரவு அவசரமாக கூடியது. அதில் தியேட்டர்களை திறப்பது, முதல் படமாக விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.