×

மாலத்தீவு கடற்கரையில் நடிகர் யாஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் யாஷ் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கேஜிஎப் படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதில் நடித்த ஹீரோ யாஷ் பெரும் புகழ் பெற்றார். நீல் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்நி, மலையாளம் என 5மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் பெரிய அளவில்
 

நடிகர் யாஷ் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கேஜிஎப் படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதில் நடித்த ஹீரோ யாஷ் பெரும் புகழ் பெற்றார். நீல் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்நி, மலையாளம் என 5மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் உள்ள நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே யாஷ் பிறந்தநாளையொட்டி சில வாரங்களுக்கு முன்பு கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. இந்த டீசரை பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் யாஷ்-க்கு படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ளதால், குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரை ஓரத்தில் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.