×

இந்தியில் சூப்பர் ஹிட்டடித்துள்ள ‘டசக்கு டசக்கு’ பாடல்.. மாஸ் காட்டும் ஹிருத்திக் ரோஷன் !

 

இந்தியில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் ‘டசக்கு டசக்கு’ பாடல் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. 

தமிழில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்த நடித்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’. கடந்த 2017-ஆம் ஆண்டு போலீஸ் - கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மிரட்டலான திரைக்கதை, சி.எஸ்.சாமின் பின்னணி இசை உள்ளிட்டவை இந்த படத்தின் ஹிட்டிற்கு காரணமாக அமைந்தது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாகும் கேங்ஸ்டராக ஹிருத்திக் ரோஷனும், போலீசாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  "Alcoholia"  என்ற பாடல் வெளியாகி டிரெண்டாகியுள்ளது. தமிழில் ‘டசக்கு டசக்கு’ என்று தொடங்கும் அந்த பாடல் தமிழை போல் இந்தியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் செம்ம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.