×

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' இந்தி ரீமேக்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

கைதி இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர்.  

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகிஇருந்த கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து கைதி  இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கட்டது. பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை  ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்கின்றனர். நடிகை தபுவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


இந்நிலையில் கைதி இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு போலா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.