×

'லால் சிங் சத்தா' படத்தை ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ்-க்கு திரையிட்டு காட்டும் ஆமீர் கான்! 

 

'லால் சிங் சத்தா' படத்தை அமீர் கான் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ்-க்கு திரையிட்டு காட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

1994-ம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹோலந்த் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' . தற்போது அந்தப் படம் இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

'லால் சிங் சத்தா' படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போதைய தகவலின்படி, அமீர் கான் லால் சிங் சத்தா படத்தை ஹாலிவுட்  நடிகர் டாம் ஹேங்ஸ்-க்கு திரையிட்டு காட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சிறப்புத் திரையிடல்  அமெரிக்காவில் நடைபெற இருக்கிறதாம். படத்தின் ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த திரையிடல் நடைபெறும் என்று தெரிகிறது.

படத்தை டாம் ஹேங்ஸ் இடம் காண்பித்து அவரது கருத்தை தெரிந்துகொள்ள ஆமீர் ஆர்வமாக இருக்கிறாராம். எனவே இரண்டு பெரிய நடிகர்களும் விரைவில் சந்தித்துக் கொள்ள இருக்கிறார்கள். 

லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.