×

 ‘வீரம்’ இந்தி ரீமேக்கின் புதிய ரிலீஸ் தேதி மற்றும் டிரெய்லர் அப்டேட்

 

அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரம்’ படத்தின் புதிய ரிலீஸ் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழில் சூப்பர் ஹிட்டடித்து நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீரம்’. அண்ணன் மற்றும் தம்பிகளுடைக்கிடையேயான கதைக்களத்தை கொண்டு உருவான இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.  சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகியுள்ளது. 

இந்தியில் ‘பச்சன் பாண்டே’ என தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ள இப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரானா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகாமல் கிடக்கிறது. 

ஏற்கனவே இப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என அக்ஷய்குமார் அறிவித்திருந்தார். ஆனால் திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் மார்ச் 18-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி டிரெய்லர் பிப்ரவரி 18-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.