அது விளம்பரத்திற்காகத் தான், ஓடிடி தளம் எதுவும் துவங்கவில்லை... ரசிகர்களை ஏமாற்றிய ஷாருக் கான்!?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விளம்பரத்திற்காகத் தான் புதிய ஓடிடி நிறுவனம் துவங்கியுள்ளதாகத் தெரிவித்தது தெரிய வந்துள்ளது.
நேற்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி தளம் ஒன்றை துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கும் வகையில் எஸ்ஆர்கே பிளஸ் என்று தளத்தின் பெயரை லோகோவுடன் வெளியிட்டார். அதையடுத்து ஷாருக் கான் சொந்த ஓடிடி தளம் துவங்க இருப்பதாக இந்தியா முழுவதும் செய்திகள் வெளியாகின.
மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப்-ம் ஷாருக் கானின் புதிய ஓடிடி தளத்திற்காக படம் இயக்க இருப்பதாக பதிவு வெளியிட்டார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.
ஆனால் ஷாருக் கான் புதிய ஓடிடி தளம் துவங்கவில்லை, ஹாட்ஸ்டாரின் புதிய விளம்பரத்திற்காகத் தான் ஷாருக் அப்படி பதிவிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தில் அனுராக்-ம் இடம் பெற்றுள்ளார்.
ஷாருக் கான் புதிய ஓடிடி தளம் துவங்குவதாக ஆர்வமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்!