×

அனுராக் காஷ்யப், டாப்ஸி கூட்டணியின் புதிய பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுராக் காஷ்யப் தற்போது டாப்ஸி நடிப்பில் 'டோபரா' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏக்தா கபூரின் கல்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். மன்மர்சியான்” மற்றும் சாந்த் கி ஆன்க் ஆகிய படங்களை அடுத்து அனுராக் மற்றும் டாப்ஸி கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். பாவில் கல்குட்டி இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தற்போது டோபரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன் இந்திய திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது. 

இதற்கிடையில் டாப்ஸி ஜெயம் ரவி உடன் தமிழில் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப், சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.