×

தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வெப் சீரிஸ் படப்பிடிப்பில் இணைந்த சமந்தா!

 

பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வெப் சீரிஸ் படப்பிடிப்பில் சமந்தா இணைந்துள்ளார். 

ராஜ் மற்றும் டீகே ஆகியோரது இயக்கத்தில் வெளியான 'தி பேமிலி மேன்' இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக மாறியுள்ளது. இரண்டாம் பாகத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் களமிறங்கினார். ராஜி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் அவருக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.  

இந்நிலையில் சமந்தா மீண்டும் பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்களாக ராஜ் மற்றும் டீகே இணையுடன் கூட்டணி அமைத்துள்ளார். சிட்டாடல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்த சீரிஸில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இந்த சீரிஸைத் தயாரிக்கின்றனர். 

தற்போது இந்த சீரிஸின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சமந்தா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தற்போது சமந்தா யசோதா பான் இந்தியா படம் ஒன்றில் நடித்து வருகிறார். பின்னர் உலகம் முழுவதும் வெளியாகக் கூடிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.