"தலைவர் ஆசீர்வாதம், தளபதியுடன் உரையாடல்" - நடிகர் ஷாருக்கானின் மாஸ் ட்வீட்!!

 
ttn

சென்னையில் 30 நாட்கள் நடைபெற்ற 'ஜவான்' படப்பிடிப்பு குறித்து நடிகர்  ஷாருக்கான்  ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார். 

tn

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் விஜய் சேதுபதி ,நயன்தாரா உள்ளிட்டோ நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விஜய் சேதுபதி ஷாருக்கான் நேரடி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அண்மையில் சென்றிருந்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.