சூப்பர் ஹிட் மலையாளப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஷாருக் கானின் மகள்!?
‘ஹ்ருதயம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால் நடிப்பில் ‘ஹ்ருதயம்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம்.
‘ஹ்ருதயம்’ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் ஹ்ரிதயம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகைகளில் ஒருவராக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னணி நடிகர் மற்றும் நடிகை யார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சுஹானா கான் தற்போது ஜோயா அக்தர் இயக்கத்தில் The Archies என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மூலம் சுஹானா நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார்.