அமிதாப் பச்சன், ஷாருக்கான், போனி கபூரின் வாரிசுகள் ஒரே படத்தில் அறிமுகம்... எகிறும் எதிர்பார்ப்பு!
பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாகும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளனர். அமிதாப் பச்சனின் பேத்தி அகஸ்தியநந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா கான், ஸ்ரீதேவியின் மகள் குஷிகபூர் ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகின்றனர். 1960-களின் இந்தியாவில் லைவ் ஆக்ஷன் இசைத் தொகுப்பாக இந்தப் படத்தை ஜோயா அக்தர் இயக்குகிறார். Archie காமிக்ஸுடன் இணைந்து, நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
மிஹிர் அஹுஜா, டாட், வேதாங் ரெய்னா மற்றும் யுவராஜ் மெண்டா ஆகியோரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தி ஆர்ச்சீஸ் என்ற காமிக்ஸ் தொடரைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. நெட்ஃபிக்ஸ்-ல் பிரத்யேகமாக அடுத்த ஆண்டு இப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் நடிகர்கள் அறிமுகம் குறித்த வீடியோவும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. வீடியோவில் 1960-களைச் சேர்ந்த தலைமுறையினரைப் போல அனைவரும் காணப்படுகின்றனர். ஒரே படத்தில் பல வாரிசு நடிகர்கள் அறிமுகம் ஆவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.