×

பாலிவுட் இயக்குனருடன் புதிய படத்திற்காக கைகோர்த்துள்ள தமன்னா!

 

தமன்னா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

தமன்னா இரண்டு சகாப்தங்களாக சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். தற்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார் இந்த மில்கி பியூட்டி  தற்போது தமன்னாவின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

சாந்தினி பார் மற்றும் ஃபேஷன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலிவுட் திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் தமன்னா நடிக்க உள்ளார்.  'பாப்லி பவுன்சர்' என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இயக்குனருடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு தனது ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தமன்னாவின் பெரும்பாலான படங்களில் அஜய் தேவ்கன் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கூட, அவர் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தாலும், பாலிவுட்டில் தமன்னாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் தமன்னா.