×

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அருண் பாலி காலமானார்!!

 

இந்தி நடிகர் அருண் பாலி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

நடிகர் கமல் ஹாசனின் ஹேராம், 3 இடியட்ஸ் ,கேதார்நாத் ,பானிபட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் அருண் பாலி. இவர் நரம்பு தசை நோயான மயஸ்தீனியா கிராவிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இவருக்கு இந்த அரிதான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அருண் பாலின் நரம்புக  மற்றும் தசைகள் செயலிழந்தன. இதனால் அவர் இந்த ஆண்டு தொடக்கம் முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்பாலி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் அருண் பாலி உயிரிழந்ததை அவரது மகன் அங்குஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.  அருண் பாலி திரைத்துறையில் பல விருதுகளை பெற்றுள்ள நிலையில் சிறந்த தயாரிப்பாளருக்கான  தேசிய விருதையும்  பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு  ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.