பாலிவுட் ரசிகர்களை கிறங்கடிக்க களமிறங்கும் சமந்தா 

 
ttn

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நிலையில் தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு புஷ்பா  படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கிறங்கடித்தார்.  இதன் பிறகு சமந்தாவின் சம்பளம் என்பது இரு மடங்காக கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ttn
இந்நிலையில் நடிகை சமந்தா இந்தியில் கரன் ஜோகர் தயாரிக்கும் படத்தில் அறிமுகமாவதாக இருந்தது. ஆனால் அந்த படம் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை, இதைத்தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா ஜோடியாக சமந்தா நடிப்பதாக செய்தி வெளியானது, ஆனால் அதைப் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.  இந்த சூழலில் நடிகை சமந்தா விக்கி கவுசல் ஜோடியாக 'தி இம்மோர்டல் அஸ்வத்தம்மா’ என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார். 

இந்த படத்தில் சாரா அலி கான் நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக சமந்தா நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.  ஆதித்யா தர் இயக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் இது புராண கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  இப்படத்திற்காக நடிகர் விக்கி கவுசல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. இப்படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.