துபாய்ல தான் ஷூட்டிங் நடத்தணும், அடம் பிடித்த ஹ்ரித்திக் ரோஷன்... உண்மை என்ன!?
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் குறித்து படக்குழுவினர் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அந்தப் படம் தற்போது இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியிலும் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து சமீபத்தில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. "ஹ்ரித்திக் ரோஷன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு உத்தர பிரதேசத்தில் நடக்க மறுத்ததாகவும் படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறியது" என்று பல செய்திகள் வெளியாகின.
அதையடுத்து படக்குழுவினர் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
"விக்ரம் வேதா படப்பிடிப்பு குறித்து நிறைய தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். விக்ரம் வேதா லக்னோ உட்பட இந்தியாவில் அதிக அளவில் படமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெளிவாகக் கூற விரும்புகிறோம். படத்தின் ஒரு பகுதி. 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் துபாயில் படமாக்கப்பட்டது, ஏனெனில் கொரோனா காலத்தில் அங்கு மட்டும் பையோ பப்பிள் அடிப்படையில் பாதுகாப்பு இருந்தது. இது போன்ற பெரிய அளவிலான குழுவினருக்கு அங்கு மட்டும் தான் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்புக்கு முந்தைய மாதங்களில் ஒரு ஸ்டுடியோவில் செட்களை உருவாக்கவும் அனுமதித்தது. பாதுகாப்பு மற்றும் நெறிமுறைக் காரணங்களுக்காக நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த முடிவெடுத்தோம். இந்த உண்மைகளின் தொகுப்பைத் திருப்புவதற்கான எந்தவொரு முயற்சியும் தவறானது மற்றும் பொய்யானது.
மேலும், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்டில் ஆக்கப்பூர்வ திறமையாளர்களிடமிருந்து பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கிறோம், தயாரிப்பு மற்றும் பட்ஜெட் முடிவுகள் ஆகியவை மையப்படுத்தப்பட்ட தனிச்சிறப்பு என்பதை நாங்கள் உறுதியாகக் கூற விரும்புகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.