கார்த்திக் ஆர்யனை திருமணம் செய்ய 20 கோடி தருவதாகக் கூறிய தீவிர ரசிகை!
Mar 11, 2022, 12:39 IST
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கார்த்திக் ஆர்யன். குறைவான காலத்திலே ரசிகர்களிடம் பிரபலம் ஆகியுள்ளார் கார்த்திக் ஆர்யன். அவருக்கு தற்போது பெண் ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாக்களில் ஆர்யன் வெளியிடும் பதிவுகள் செம ஹிட் அடித்து வருகின்றன. தற்போது கார்த்திக் ஆர்யனின் தீவிர ரசிகை தெரிவித்துள்ள கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், கார்த்திக் ஆர்யன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தீவிர ரசிகை ஒருவரின் கமெண்ட் கார்த்திக் ஆர்யன் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த ரசிகை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கு 20 கோடி தருகிறேன்" என்று தெரிவித்திருந்தார். அதற்கு சிரிக்கும் எமோஜியுடன் (எப்போது)?" என்று கார்த்திக் ஆர்யன் பதிலளித்துள்ளார்.