×

சோனு சூட்டின் பெயரை உணவகத்திற்கு வைத்த நபர்… அவரிடம் சோனு சூட் கேட்ட உதவி!

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இன்னும் ஏராளமான உதவிகள் செய்துள்ளார், செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது. இவரிடம்
 

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இன்னும் ஏராளமான உதவிகள் செய்துள்ளார், செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது. இவரிடம் உதவி பெற்ற மக்களும் தங்கள் நன்றிக்கடனை உரிய முறையில் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் சைனீஸ் பெயரில் இருந்த தனது உணவகத்தின் பெயரை சோனு சூட் என்று மாற்றியுள்ளார். மேலும் அங்கிருக்கும் மெனு, பேனர் என எல்லாவற்றிலும் சோனு சூட்டின் புகைப்படங்களை வைத்துள்ளார். நான் கடவுளைப் பார்த்ததில்லை, ஆனால் நான் நிஜ வாழ்வில் ஒரு கடவுளைக் கண்டேன், அது சோனு சூட் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த ட்வீட்டிற்குப் பதிலளித்த சோனு சூட் ‘அங்கே எனக்கு ஒரு ட்ரீட் கிடைக்குமா? என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார். சோனு சூட்டின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.