×

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்?

 

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபமாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை பொய்யாக்கும் விதமாக மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’ மற்றும் ‘ராவண்’ ஆகிய படங்களில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இருவருமே இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகள். மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் இருவருக்குமே நெருங்கிய நட்பு இருக்கிறது. அவரை ’இருவர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் தான் என்பது நினைவுக் கூரத்தக்கது. இதனால் மணிரத்னம் – அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது உண்மை தான் என்று கருதப்படுகிறது.