×

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்தா?- ஷாக்கிங் புகைப்படம்.

 

ஸ்டார் தம்பதிகளாக பாலிவுட்டில் வலம் வரும் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சிகொடுத்துள்ளது.

மாடலிங் துறையில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி  பட்டம் வென்றார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதில் கவனம் செலுத்தினார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வந்த அவர் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் சர்சைகளை கிளப்பும் உமர் சந்த், ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பல முறை இவர்களது விவாகரத்து குறித்த போலியான  செய்தி பரவியதுண்டு. ஆனால் இந்த முறை அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதனை உறுதிபடுத்தும் விதத்தில் உள்ளது. அதாவது அவரது சமீபத்திய புகைப்படத்தில் அவர் கையில் திருமண மோதிரம் இல்லை.அதனால் விவாகரத்து செய்தி உண்மை என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கு விதமாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதிகளின் ரசிகர்கள் மோதிரம் இல்லை என்றால் விவாகரத்தா? யாரும் இதை நம்பவேண்டாம். விரைவில் அவர்கள் இது பொய் என பதிலடி கொடுப்பார்கள் என கூறி வருகின்றனர்.