×

பியர் க்ரில்ஸ் உடன் காட்டிற்குள் பயணம் செய்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!

 

நடிகர் அஜய் தேவ்கன் பியர் க்ரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் செய்துள்ளார். அது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. 

டிஸ்கவரி சேனலில் Man Vs Wild நிகழ்ச்சி மிகவும் பிரபலம். காட்டுக்குள் செல்லும் அவர் அங்குள்ள ஆபத்தான சூழலை சமாளித்து எப்படி உயிர் பிழைக்கிறார் என்பதே நிகழ்ச்சியின் சாராம்சம். இந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க பிரபலமானது. பியர் க்ரில்ஸ் என்பவர் தான் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட். 

தற்போது திரைத்துறை பிரபலங்களும் பியர் க்ரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி பியர் க்ரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் செய்தார். அந்த எபிசோட் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து ரஜினிகாந்த் காட்டிற்குள் பயணம் செய்தார். 

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பியர் க்ரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் செய்துள்ளார். அந்த எபிசோட் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.