×

நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதி!

நடிகர் அக்ஷய் குமார் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரோனவாவின் இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. திரைத்துறைப் பிரபலங்கள் பலர் ஒவ்வொரு நாளும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில். மாதவன் குடும்பத்தினர், கௌரி கிஷன் என ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடிகர் அக்ஷய் குமார் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று காலை, நான் கொரோனா தொற்றால்
 

நடிகர் அக்ஷய் குமார் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனவாவின் இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. திரைத்துறைப் பிரபலங்கள் பலர் ஒவ்வொரு நாளும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களில். மாதவன் குடும்பத்தினர், கௌரி கிஷன் என ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடிகர் அக்ஷய் குமார் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று காலை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்துநெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். நான் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். தேவையான மருத்துவ உதவியை நாடியுள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களைச் சோதனை செய்து கொள்ளும்படி நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். மிக விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.