ஹோட்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா விருந்தினர் மாளிகையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இமாச்சலபிரசுதேஷத்தின் தர்மஷாலாவில் உள்ள விருந்தினர் மாளிகையில் பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ராவின் உடல் கண்டெடுப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 53 வயதான நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் ஆசிப் பாஸ்ரா காவோ, பெ சே, பர்சானியா, மற்றும் ப்ளாக் ஃப்ரைடே போன்ற பல பாலிவுட் படங்களில்நடித்துள்ளார் . ‘அவுட்சோர்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். பாட்டல் லோக், வோ, ஹாஸ்டெஜஸ் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
ஆசிப் பாஸ்ராவின் மரணம் பாலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.