×

எனக்கு ரஜினி, கமல், சிரஞ்சீவியை மிகவும் பிடிக்கும்... பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர்!

 

ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் 'பிரம்மாஸ்த்ரா' என்ற திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

வரும் ஜூன் 15-ம் தேதி இந்தப் படம் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது. 'பிரம்மாஸ்த்ரா' படத்தை தெலுங்கில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார். படத்தின் ப்ரோமோஷனுக்காக ரன்பீர் கபூர், ராஜமௌலி மற்றும் அயன் முகர்ஜி ஆகியோர் நேற்று விசாகப்பட்டினம் வந்தனர். 

இந்த நிகழ்வின் போது, ​​தென்னிந்திய சினிமா மற்றும் டோலிவுட்டில் தனக்கு பிடித்த ஹீரோ பற்றி பேசிய ரன்பீர், “நான் தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ரஜினி சார், கமல் சார், சிரஞ்சீவி சார் ரொம்ப பிடிக்கும். மறுபுறம், என்டிஆர் மற்றும் ராம் சரண் என் அன்பு நண்பர்கள். பவன் கல்யாண் காருவின் ஸ்வாக் எனக்கு எப்போதுமே பிடிக்கும். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவை எப்போதும் கொண்டாட்டமாக ஆக்கிவிடுகிறார்கள்” என்றார்.

எல்லா ஹீரோக்களுமே பெரியவர்கள் தான்.  ஆனால் எனக்கு பிடித்த ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால், நான் பிரபாஸை விரும்புகிறேன். அவர் என்னுடைய அன்பான நண்பர்” என்றார்.

தங்கள் படத்தை விளம்பரப்படுத் தவரும் நாட்களில் பல பாலிவுட் நடிகர்கள் இனி வைசாக் வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.