×

நடிகரை படுக்கைக்கு அழைத்த  பிரபல நடிகை – அவரே சொன்ன பகீர் தகவல்!

 

சினிமாதுறையில் பல நடிகைகள் casting couch குறித்து பேசியுள்ளனர். ஆனால நடிகர்களுக்கும் இப்படியான தொந்தரவுகள் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான ரவி கிஷன், தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பொதுவெளியில் பேசி பகீர் கிளப்பியுள்ளார்.

நிறைய பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரவி கிஷன். இவர் இந்தி பிக்பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளரும் ஆவார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் " எனது ஆரம்பகட்ட திரைவாழ்க்கையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக தேர்வானேன், அந்த சமயத்தில் தான் நான் அந்த மோசமான அனுபவத்தை சந்தித்தேன், அந்த பெண் பிரபலம் எனக்கு போன் செய்து இரவில் காபி குடிக்க வருமாறு அழைத்தார். பகலில் தானே காபி குடிப்பாங்க இது என்ன புதுசா இருக்கு அதுமட்டுமல்லாமல் நான் ஒரு ஆரம்ப நிலை சாதாரண நடிகன் என்னை ஏன் அவர் அழைக்கிறார் என யோசித்தேன் பிறகு எனக்கு கொஞ்சம் புரிந்தது. நான் செல்ல  மறுத்துவிட்டேன். பிறகு நான் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டேன். அந்த பிரபலத்தின் இச்சைக்கு நான் சம்மதிக்காததால் அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது என்பதை பிறகுதான்உணர்ந்தேன்." தொடர்ந்து யார் அந்த பிரபலம் என தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதனை கூற அவர் மறுத்துவிட்டார் அவர் தற்போது மிகப்பெரிய பிரபலம் என்பதால் கூற மறுத்துவிட்டார் கிஷன்.