×

நீட், JEE தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள சோனு சூட்!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மானவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளும் ரத்தாகின. தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் JEE முதன்மைத் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். தேர்வில் பல லட்சம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் இருக்கும்
 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மானவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளும் ரத்தாகின. தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் JEE முதன்மைத் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். தேர்வில் பல லட்சம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்த நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி இந்தத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது நடிகர் சோனு சூட் இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப் பதிவில் “நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நீட் / ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கிறேன்! இந்த கொரோனா சூழ்நிலையில், நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டும் மற்றும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது!” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பதிவில் பிரதமர் மற்றும் மத்திய கல்வித்துறையையும் டேக் செய்துள்ளார்.