×

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் வில்லன்!

பாலிவுட் நடிகரான வித்யுத் ஜம்வால், படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். பாலிவுட் நடிகரான இவர், ‘பில்லா 2’ மற்றும் ‘அஞ்சான்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வித்யுத் ஜம்வால், ‘சக்தி’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள வித்யுத், கடந்த
 

பாலிவுட் நடிகரான வித்யுத் ஜம்வால், படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். பாலிவுட் நடிகரான இவர், ‘பில்லா 2’ மற்றும் ‘அஞ்சான்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வித்யுத் ஜம்வால், ‘சக்தி’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள வித்யுத், கடந்த சில வருடங்களாக இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் வித்யுத் ஜம்வால். உடலில் ஆடை எதுவுமின்றி ஒரு பெரிய துண்டைப் போர்த்தியுள்ள அவர், தனது தொடை முழுவதும் தெரியும்படி அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன், ‘நீங்கள் என்னைப் பிடிக்க ஆரம்பித்தால், பதிலுக்கு நான் உங்களைப் பிடிக்க ஆரம்பிப்பேன்’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வித்யுத் ஜம்வாலின் கவர்ச்சிப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படம் பதிவிட்ட 20 மணி நேரத்தில், 5 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

வித்யுத் ஜம்வால் ஹீரோவாக நடித்த ‘யாரா’, ‘குதா ஹஃபிஸ்’ இரண்டு இந்திப் படங்களுமே சமீபத்தில் OTTயில் நேரடியாக ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.