×

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரானா… பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தொற்றால் பாதிப்பு…

பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து தாக்கிய வரும் கொரானாவால், நடிகை பூமி பெட்னேகரும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே மகாராஷ்ரா மாநிலத்தில்தான் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளது. 2வது அலை உருவாகியுள்ளதால் மும்பை மாநகரில் கடும் காட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இரவு நேர ஊரடங்கும், வார இறுதியில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. மும்பையில்தான் பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகின்றனர். அதனால் பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா
 

பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து தாக்கிய வரும் கொரானாவால், நடிகை பூமி பெட்னேகரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே மகாராஷ்ரா மாநிலத்தில்தான் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளது. 2வது அலை உருவாகியுள்ளதால் மும்பை மாநகரில் கடும் காட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இரவு நேர ஊரடங்கும், வார இறுதியில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. மும்பையில்தான் பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகின்றனர். அதனால் பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆதித்யா நாராயண், ரூபாலி கங்குலி, கார்திக் ஆர்யன், ஆமிர் கான், விக்கி கவுஷல் என வரிசையாக பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை பூமி பெட்னேகர் தற்போது கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை பூமி பெட்னேகர் வெளியிட்டுள்ள பதிவில், சிறிய அளவிலான அறிகுறிகளுடனே நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். இதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். அதிகபட்ச பாதுகாப்புடன் இருந்த எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் கொரானா வழிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.