×

பிரபாஸ், தீபிகா படுகோனே கூட்டணியில் இணையும் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகை!

 

பிரபாஸ் நடிப்பிக் உருவாக இருக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. 

‘மஹாநடி’ இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். க்குழு தெரிவித்துள்ளனர்.

பிரபாஸ் 21 படம் 400 கோடி பட்ஜெட்டில் கற்பனை மூன்றாம் உலகப்போரில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் தற்போது பாலிவுட் நடிகை திஷா பதானி இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அவருக்கு வரவேற்பு அளித்து பூங்கொத்து அனுப்பியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை திஷா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.