×

இயற்கையே ரசிக்கும் பேரழகில் மின்னும் நடிகை ஜான்வி கபூர்!

 

நடிகை ஜான்வி கபூரின் இயற்கை எழில் கொஞ்சும் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.  

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'தடக்' என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்த ஜான்விக்கு 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.  

கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆன குட் லக் ஜெரி படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அதையடுத்து மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

ஜான்வி எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். கிளாமரிலும் களமிறங்கி அசத்துவார்.

தற்போது இயற்கை எழில் கொஞ்ச இயற்கையுடன் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.