×

ஆலியா பாட்டின் 'கங்குபாய்' படத்தை பாராட்டியுள்ள கங்கனா ரனாவத்... வியப்பில் பாலிவுட்!

 

நடிகை கங்கனா ரணாவத் ஆலியா பாட்டின் கங்குபாய் படத்தைப் பாராட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட் பிரபல நடிகை  ஆலியா பாட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி திரைப்படம் வெளியாகியுள்ளது. மும்பை காமாட்டிபுராவில் கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.  

இந்தப் படத்தை பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆலியா பாட் இந்தப் படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்கிறார். .

தற்போது கங்கனா கங்குபாய் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். 

"தென்னிந்தியத் திரையுலகில் இருந்து அதிக படங்கள் வசூல் சாதனையுடன் திரையரங்குகள் புத்துயிர் பெறுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஹிந்தி இந்தி சினிமாவும் சில சிறிய படிகளை எடுத்து வைப்பதை கேள்விப்பட்டேன். ஒரு பெரிய ஹீரோ மற்றும் சூப்பர் ஸ்டார் இயக்குனரைக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்ட படம் இது. அவை சிறிய முன்னேற்றமாக படிகளாக இருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலுக்கு திரையரங்குகளுக்கு அவை முக்கியமானதாக இருக்கும். நன்று."

மேலும், “திரைப்பட மாஃபியா சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது நல்லது செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படி நன்மை செய்தால் நாம்  முற்றிலும் பாராட்டப்படுவோம். சிறந்ததை எதிர்பார்க்கிறேன். ”

கங்கனா எப்போதும் பாலிவுட் திரையுலகை வாரிசு அரசியலை வைத்து விமர்சிப்பதே வழக்கம். இந்நிலையில் அவர் தற்போது ஆலியா பாட்டின் நடிப்பைப் பாராட்டியுள்ளது பாலிவுட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.