×

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த படம் ஒத்திவைப்பு!

 

நடிகை ரகுல் ப்ரீத் சிங்  நடிப்பில் உருவாக இருந்த புதிய இந்தி படம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தற்போது ஓடிடி தளங்களின் வரவு அதிகரித்துள்ளதை அடுத்து சென்சார் பயம் இல்லாமல் அடல்ட் மற்றும் அதிக வன்முறை கொண்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் வரவு அதிகரித்துள்ளது. மேலும் பெரும்பாலான ஓடிடி தளங்களும் அத்தகைய படங்களையே வாங்குவதற்கு விரும்புகின்றனர்.

பாலிவுட்டில் இந்த மாதிரியான படங்களை அதிகளவில் தயாரித்து வருகிறார் ரோனி ஸ்க்ரூவிலா. அவர் ரகுல் ப்ரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. 

காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிதாக ஒரு காண்டத்தை அறிமுகப்படுத்தும் போது அது எவ்வாறு பயனாளர்களுக்கு உள்ளது அதன் செயல்பாடு எத்தகையது என்று இளம் பெண்கள் சோதித்து சொல்வர்.  முதலில் சாரா அலிகான் உள்பட பல நடிகைகள் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய போது, நடிக்க முடியாது என மறுத்துவிட்டனர். இறுதியில் தான் ரகுல் ப்ரீத் விரும்பி ஒப்புக் கொண்டார். அவரை மையப்படுத்தியே கதையும் எழுதப்பட்டது. 

படம் துவங்கப்பட்டது முதலாகவே பல சிக்கல்கள் நிலவி வந்தது. தற்போது இந்தப் படத்தை ஒத்தி வைப்பதாக ரோனி அறிவித்துள்ளார். மேலும் காண்டம் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தப் படம் வருவதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்தப் படம் முற்றிலும் கைவிடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.