கொரானாவை தடுப்பது எப்படி ?… ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்…
கொரானாவை எதிர்க்க உடற்பயிற்சி அவசியம் என பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட் 3 படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.
சினிமாவை தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு சொந்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். அதில் நான் சினிமாவில் நடித்துக்கொண்டே உடற்பயிற்சி கூடத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் இந்த உடற்பயிற்சி கூடத்தில் நல்ல வருமானம் வந்தது. ஆனால் ஊரடங்கு காலத்தில் எந்த வருமானமும் இன்றி நஷ்டத்தில் இயங்கி வந்தது. இருந்தபோதிலும் உடற்பயிற்சி கூடத்தில் வேலைப்பார்த்த ஊழியர்களுக்கும் முழு சம்பளமும் கொடுத்து, அவர்களுக்கு எந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டேன்.
பின்னர் ஊரங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியதால் உடற்பயிற்சி கூடம் திறந்தவுடன் நல்ல வருமானம் வருகிறது. எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கிறேன் என்று கூறிய அவர், ஊரடங்கு வராமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது என்றார். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொரோனாவை எளிதாக வென்றுவிடலாம். அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.